சசிகுமார், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா…?
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நாயகி. இவர் நடிப்பில் இந்த வாரம் கூட சாமி-2 படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகின்றது. இப்படத்தை சுந்தரபாண்டியன் படத்தை எடுத்த பிரபாகரன் இயக்கவுள்ளாராம்.
மேலும், இதில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடிக்கவுள்ளனர், இப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம் என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.
கீர்த்தி எப்போதும் முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பார் என்பது மட்டுமன்றி, தன் கதாபாத்திரம் முக்கியத்துவம் இருந்தால் யாருடன் நடிப்பார் என நிரூபித்துள்ளார்.