சக நடிகர்களுக்கு தங்க காசினை பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்
மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சாவித்ரி தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு தங்க காசினை பரிசாக கொடுக்கும் பழக்கம் உள்ளவராம். அதே போல், தற்போது அவரது கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷும் தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். இதனால் பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷை வாழ்த்தி வருகின்றனர்.