நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் தான் ‘சர்கார்’. நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படம் முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான நாள் தொடங்கிய முதல் ஒவ்வொரு நாளும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகிறியிருந்த நிலையில் நேற்று தீபாவளியன்று வெளியானது.வெளியான முதலே ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மேள தாளங்கள் தெறிக்கவிட்டு,பட்டாசுக்களை வெடித்து சர்கார் தீபாவளியை விஜய் ரசிகர்கள் வரவேற்றனர்.
ரசிகர் ஒருபக்கம் தங்கள் தளபதியை கொண்டாடிவரும் நிலையில் மறுபுறம் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சென்னை குரோம்பேட்டை உள்ள வெற்றி திரையரங்கில் ‘சர்கார்’ படத்தை கண்டுகளித்துள்ளார். இந்த படத்தை அவருடன் இயக்குநர் அட்லி மற்றும் அவரது குடும்பத்தினரும் படத்தைக் காண வந்திருந்தனர். மேலும் அவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் படத்தை தன் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.
அவர்கள் திரையரங்கிற்கு வந்த இச்செய்தியை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
இது ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணிக்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றி என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.மேலும் படம் ஒவ்வொருவரும் தனது வாக்கு எவ்வளவு முக்கியம் வாக்கு செலுத்த வேண்டிய அவசியத்தை உறுதியோடு பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…