கேரளா வெள்ள நிவாரண நிதி:உங்களால இவ்ளோதான் கொடுக்க முடியுமா?நடிகர் சங்க நிதியுதவி மீது பாயும் விமர்சனம்
கேரளாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட நிதி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி எல்லாமே முதல்வரின் நிவாரண நிதித் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துத் தரப்படும்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வழங்கிய ரூ.5 லட்சம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. ‘நடிகர்களிடம் காசு இல்லையா? கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்களே…’, ‘இது மிகச்சிறிய உதவி’ என்பது போன்ற விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
DINASUVADU