கேணி படத்தின் திரை விமர்சனம் ..!

Published by
Dinasuvadu desk

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’.
Image result for keni tamil movie
அரசு உயர் பதவியில் இருக்கிறார், ஜெயப்பிரதாவின் கணவர். அரசியல்வாதிகள் மோசடிக்கு உடன்படாத அவரை பொய் வழக்கில் கைது செய்கிறார்கள். ஜெயப்பிரதாவிடம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டுக்கு போகும்படி சொல்லி விட்டு, சிறைக்குள்ளேயே கணவர் இறந்து போகிறார்.

அப்பாவி இளைஞர் ஒருவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றனர். அந்த இளைஞரின் மனைவி பார்வதி நம்பியாரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு வருகிறார், ஜெயப்பிரதா. அங்குள்ள மக்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால், ஜெயப்பிரதா வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் வற்றாத தண்ணீர் இருக்கிறது. குடிநீருக்கு கஷ்டப்படும் மக்களுக்கு தனது கிணற்று தண்ணீரை கொடுக்க முடிவு செய்கிறார், ஜெயப்பிரதா. அப்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது.

தமிழக, கேரள எல்லை பிரிப்பில் அந்த கிணறு கேரளா பகுதிக்கும், ஜெயப்பிரதாவின் வீடு தமிழக எல்லைக்கும் வந்து விடுகிறது. கிணற்று தண்ணீரை எடுக்க கேரளா தரப்பில் எதிர்ப்பு கிளம்புகிறது. ஜெயப்பிரதா மட்டும் கேரள எல்லைக்குள் அந்த நீரை பயன்படுத்தலாம் என்று உத்தரவு வருகிறது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா போராடுகிறார். அவருக்கு ஆதரவாக கிராமத்து மக்களும் களத்தில் குதிக்கின்றனர். கிணற்றை சுற்றி போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். அவர் கிணற்று தண்ணீரை மீட்டு மக்களுக்கு கொடுத்தாரா? என்பது மீதி கதை.

இந்திரா கதாபாத்திரத்தில் ஜெயப்பிரதா வாழ்ந்து இருக்கிறார். கிணற்றை மீட்க அரசு அலுவலகங்கள், மந்திரி வீடு என்று அலைந்து காத்து கிடப்பதிலும், அதிகாரிகளால் உதாசினப்படுத்தப்படுவதிலும், அனுதாபப்பட வைக்கிறார். வறண்ட பூமியில், தண்ணீருக்கு அலையும் பொதுமக்களின் நிலை கண்டு கலங்குவதிலும் மந்திரி காரை மறித்து ஆவேசப்படுவதிலும், கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.

கணவரின் பிரிவையும், காமவெறி கொண்ட போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க போராடும் தவிப்பையும், கண்களில் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார், பார்வதி நம்பியார். ஊர் தலைவராக வரும் பார்த்திபன் அவருக்கு உரிய நக்கல் வசனத்தில், கவர்கிறார். வக்கீலாக வரும் நாசர், கலெக்டராக வரும் ரேவதி, நியாயத்தின் பக்கம் நின்று தீர்ப்பு சொல்லும் மனிதாபிமானம் மிகுந்த நீதிபதியாக ரேகா, குடிநீருக்கு குடத்துடன் அலையும் ஏழைத்தாயாக அனுஹாசன், அமைச்சராக வரும் ‘தலைவாசல்’ விஜய், எம்.எஸ்.பாஸ்கர், டீ கடை மாஸ்டர் என்று அனைவரும் யதார்த்தமான நடிப்பில் மனதில் நிற்கிறார்கள்.

இடைவேளைக்கு பிறகு படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தண்ணீர் அரசியலை கருவாக வைத்து சமூக அக்கறையுடன் கதை சொல்லி இருக்கிறார். ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. நவுஷாத் ஷெரிப் கேமரா வறண்ட பூமியையும், பச்சைப்பசேல் அழகையும் இயல்பாக படம் பிடித்து இருக்கிறது.

Recent Posts

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

50 minutes ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

1 hour ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

3 hours ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

3 hours ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

4 hours ago