குடிபோதையில் பிரபல நடிகர் நண்பருடன் ரகளை ..!
பிரபல நடிகர் பாபி சிம்கா நட்சத்திர ஓட்டலில் நண்பருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பாபி சிம்கா தமிழில் ஜிகர்தண்டா ,உறுமீன் ,பாம்பு சட்டை,கோ 2 உட்பட பல படங்களில் நடித்தவர் ஆவார் .இவர் ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடிகர் பாபி சிம்கா சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதியில் மது போதையில் நண்பருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பாபி சிம்ஹாவுக்கும் நண்பருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் துறையிடம் தகவல் தெரிவித்தனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.