கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயின் காலை தெரிந்து மிதித்தாரா?தெரியாமல் மிதித்தாரா?அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது.
விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
ஷோபாவில் உட்கார்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டிருக்கும்படியான இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்த நிலையில் அதிர்ச்சியானார்கள். கீர்த்தி சுரேசை கண்டித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறார்கள். கீர்த்தி சுரேசுக்கு எதிராக மீம்ஸ்களை உருவாக்கியும் பரவ விடுகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.