கிளாமரா அய்யோ நோ ..!நோ …!அது அப்போம் ..!இப்போம் கிளாமர் ஒகே ..!ஒகே சொன்ன ரெஜினா …!
நடிகை ரெஜினா தமிழில் அறிமுகமானபோது, ‘எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன்’ என்று சொன்னார். இதனால் அவருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்குக்கு சென்றார். அங்கு அவர் நடித்த படங்களில் கிளாமர் அதிகமாக இருந்தது.
திடீரென்று அவர் தன் கொள்கையை மாற்றிக்கொள்வதற்கு நிறைய புது நடிகைகளின் வரவும், அவர்களின் தாராளமய கவர்ச்சிக் கொள்கையும்தான் என்பது ரசிகர்களுக்குப் புரிந்தது.
இனி கவர்ச்சி காட்டி நடிக்காவிட்டால், புதுப்பட வாய்ப்புகள் பெறுவது எளிதான விஷயம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள ரெஜினா, தனது அதிரடி மாற்றத்தால், கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்தார். இந்த ஆண்டும் அதே பாணியைக் கடைப்பிடித்து வரும் அவர், திரு இயக்கியுள்ள மிஸ்டர் சந்திரமவுலி படத்தில், கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டுப் பாடல் காட்சியில், இதுவரை எந்த நடிகையும் நடிக்காத அளவுக்கு கவர்ச்சி உடையில் தோன்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.