கிறுஸ்துமஸ் விடுமுறைக்கு போட்டிபோடும் தமிழ் திரைப்படங்கள்!!
சென்ற வாரம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் 2.O திரைப்படம் வெளியானதால் மற்ற தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் கண்டது. மேலும் படத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளதால் முன்னனி ஹீரோக்களின் படங்கள் சில மொத்தமாக கிறுஸ்துமஸை குறிவைத்து களமிறங்க உள்ளன.
விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம் டிசம்பர் 20இல் ரிலீஸாக உள்ளது. அடுத்தது ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் டிசம்பர் 21இல் வெளிய்கும் என அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படமும் அதே தேதியில் (டிசம்பர் 21) ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே கிறுஸ்துமஸ் விடுமுறையை குறி வைத்து தனுஷ் – பாலாஜி மோகன் கூட்ணியில் உருவான மாரி 2 படமும் ரிலீஸாகும் என தெரிகிறது. இது போதாது என்று வேற்று மொழி தமிழ் டப்பிங் படங்களான ஷாருகானின் ஜீரோ திரைப்படமும், கேஜிஎஃப் என்ற தெலுங்கு படமும் அதே தேதியில் ரிலீஸாக உள்ளதாக தெரிகிறது.
தேதி நெருங்ககும் போதுதான் எந்தெந்த திரைப்படங்கள் முன் வருகின்றன. எவையெல்லாம் பின் வாங்குகின்றன என்று.
source : cinebar.in