நவம்பர் இறுதியில் சூப்பர் ஸ்டாரின் 2.O படம் இறங்கி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதாலும், அடுத்து பொங்கலுக்கு ஜனவரி 10இல் தல அஜித்தின் விசுவாசம், அடுத்து பொங்கலுக்கு மீண்டும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் இறங்குவதாலும், மற்ற பட தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென தெரியாமல், டிசம்பர் 21இல் கிருஸ்த்துமஸ் தின விடுமுறையை கணக்கிட்டு கோலிவுட் முக்கிய ஹீரோக்கள் மோத உள்ளனர்.
டிசம்பர் 20ஆம் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 21இல் தான் ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், தனுஷின் மாரி 2 என போட்டி இந்த நான்கு படங்களுக்கு இடையில் பலமாக உள்ளது.
இது போதாது என்று, நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்த முதல் படமான கனா திரைப்படத்தையும் அதே தேதியில் களமிறக்க முடிவு செய்து விட்டார். இத்திரிப்பிடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த 5 படங்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எப்படி தியேட்டர் ஒதுக்க போகிறார்கள் என தெரியவில்லை.
source : cinebar.in
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…