கிசிகிசு உண்மையானது……… பிக்பாஜ் வருணிக்கு கல்யாணம்……டிஸ்னி ஸ்டைலில் பத்திரிக்கையை……..பறக்கவிட்ட காதல் ஜோடிகள்…!!
பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி தனது திருமண அழைப்பிதழை டிஸ்னி ஸ்டைலில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,கிடாரி, வாடீல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக களமிரங்கினார்.இந்நிலையில் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாக்குமாரும்-நடிகை சுஜா வருணியும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து நடிகை சுஜாவருணியின் பிறந்த நாளானன்று அவரது காதலர் திருமண தேதியை வெளியிட்டிருந்தார். அதில், 11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது.
நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த பிறந்தநாளில் இதை சொல்லிக் கொள்கிறேன். சாகும் வரைக்கும் பிரியாமல், அன்புடன் இருப்போம்” என்று சிவாஜி தேவ் கூறியிருந்தார்.