காவிரி விவகாரத்தில், முதுகிற்கு பின்னால் ஒழிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுகிறது”…!

Default Image

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்திற்கான 6 பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் கூட்டத்தில் பேசிய  கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் பல நூறு ஆண்டுகளாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும் என தெரிவித்த அவர், உண்ணாவிரதப் போராட்டங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என கூறினார். காவிரி விவகாரத்தில் தீர்வை நோக்கி தமிழக அரசு நகரவில்லை எனவும், முதுகிற்கு பின்னால் ஒழிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

பின்னர், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை குறித்து பேசிய கமல்ஹாசன் மக்கள் நலன் என்ற ஒன்றுதான் தங்கள் கட்சியின் ஒற்றைக்கொள்கை என தெரிவித்தார். அதற்கான செயல்திட்டங்களாக விவசாயம், நீர்வளம், பாசனபரப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மக்களின் உடல்நலம், பெண்கள் மேம்பாடு குறித்து தனி கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.  பல கோடி பணத்தை கொடுத்து துணைவேந்தர் பதவி பெறுபவர்கள் தேச துரோகிகள் என கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்