சமூக வலைதளங்களில், நடிகர் சிம்புவின் கோரிக்கையை ஏற்று தங்களுக்குப் போக மிஞ்சிய தண்ணீரை தமிழர்களுக்குத் தர சம்மதிக்கும் வகையில் கர்நாடக வாழ் மக்கள் எனக் கூறி சிலர் தண்ணீர் கொடுப்பது போன்ற சில காட்சிகள் பகிரப்படுகிறது.
காவிரி பிரச்சனை தொடர்பாக கன்னடர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகளை இணையதளத்தில் பகிருமாறு நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் குறிப்பிட்ட புதன் கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் சிம்புவின் ரசிகர்களும், கர்நாடக வாழ் மக்கள் எனக் கூறியும் சிலர் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற காட்சியைப் பகிர்ந்துள்ளனர். யுனைட் ஃபார் ஹியூமானிடி எனும் ஹேஸ்டேக்கில் அத்தகைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலவுகின்றன.இந்நிலையில் காவிரி பிரச்சினை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கர்நாடகாவில் சிம்புவிற்கு கட்-அவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.