ஸ்ருதிஹாசன் சில மாதங்களாகவே எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது.
படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார்.
எங்குப் போனாலும் அவரது காதலனும் லண்டன் நடிகருமான மைக்கேல் கார்சேல் உடன் ஜோடிப்போட்டு போஸ் கொடுத்து வருகிறார்.
இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை.
இந்நிலையில் ரொமான்ஸ் மூடில் இருந்து திரும்ப சினிமா மோடிற்கு திரும்பி இருக்கிறார் ஸ்ருதி.
விஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’யில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஸ்ருதி.
இந்தப் படம் பாலிவுட்டில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ‘சங்கமித்ரா’ சர்ச்சைக்கு பிறகு எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் மீண்டும் தமிழுக்கு திரும்பாமல் பாலிவுட்டிற்கு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…