இயக்குநர் பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த ட்ரெய்லரை சமூக வலைதளமான யூடியூப் பக்கத்தில் சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததால் தொடர்ந்து அது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து யூடியூபில் வெளியான காலா படத்தின் ட்ரெய்லருக்கு பின்னூட்டமிட்ட தமிழ் ராக்கர்ஸ் , நாங்கள் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பே வெளியிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
திருட்டு விசிடி மற்றும் புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை முற்றிலும் ஒழிப்பேன் என தயாரிப்பாளர் சங்க தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் நிர்வாகிகளின் இந்த பகிரங்க அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…