காலா படத்தை ரிலீசுக்கு முன்பே வெளியிடுவோம்: தமிழ் ராக்கர்ஸ் அதிரடி ..!

Default Image

இயக்குநர் பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.Image result for kaala

இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த ட்ரெய்லரை சமூக வலைதளமான யூடியூப் பக்கத்தில் சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததால் தொடர்ந்து அது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.Related image

இதைத்தொடர்ந்து யூடியூபில் வெளியான காலா படத்தின் ட்ரெய்லருக்கு பின்னூட்டமிட்ட தமிழ் ராக்கர்ஸ் , நாங்கள் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பே வெளியிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருட்டு விசிடி மற்றும் புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை முற்றிலும் ஒழிப்பேன் என தயாரிப்பாளர் சங்க தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் நிர்வாகிகளின் இந்த பகிரங்க அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Related image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்