மஹேந்திரா நிறுவனத்தின் தார் ஆஃப் ரோடர் மாடலுக்கு காலா திரைப்படம் சிறப்பான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் காரினை மஹேந்திரா நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது.
இதற்கென ரஜினிகாந்த் பயன்படுத்திய காரினை மஹேந்திரா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை ஆனந்த் மஹேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினி மஹேந்திரா தார் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தினசரி நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளது.
மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் ஜீப் DI மற்றும் CRDe என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் DI வேரியன்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் என பொருள்படுகிறது, இந்த மாடல் ஊரகம் மற்றும் ஊராட்சி சார்ந்த நகர பகுதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதனை மக்கள் பயன்பாடு, விவசாய பணிகள் மற்றும் பொது பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றதாக இருக்கிறது.
தார் ஆஃப் ரோடர் DI வேரியன்ட் 8 பேர் அமரக்கூடியதாகும். இந்த ஜீப் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் M2DICR டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 63 பிஹெச்பி பவர், 180 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதில் பவர் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
மஹேந்திரா தார் DI மாடலில் ரியர் வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் அனைத்து வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.
தார் CRDe வேரியன்ட் நகரவாசிகளுக்கு ஏற்ற வகையில், கிளாசிக் தோற்றம் கொண்ட ஜீப் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையிலான இன்டீரியர், சீட் மற்றும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கபக்பட்டுள்ளது. இந்த மாடலில் 4-வீல் டிரைவ் ஸ்டேன்டர்டு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
இத்துடன் CRDe மாடலில் ஏசி வசதி, பவர் ஸ்டீரிங் உள்ளிட்டவை ஸ்டேன்டர்டு ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது இதன் 2.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் 105 பிஹெச்பி பவர், 247 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8-பேர் அமரக்கூடிய சீட்டிங், DI வேரியன்ட்-ஐ விட சிறப்பான இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது.
தலைசிறந்த அம்சங்களை போன்றே மஹேந்திரா தார் CRDe வேரியன்ட் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.