கார் காணாம போச்சு அப்போம் ?ஆனா இப்போம் எப்படி இங்க?நல்ல டிரைவர், நல்ல ஓட்டுநர் இதில் கார் திருட்டு வேற போலீஸ் குமுறல் ..!யுவன் சமாளிப்பு …!
கார் காணாமல் போன விவகாரத்தில் யுவன் சங்கர் ராஜா வீட்டில் நடந்த நகைச்சுவை சம்பவத்தால் தலையில் அடித்துக்கொண்ட போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி பின்புறம் ஒரு அபார்ட்மெண்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா வசித்து வருகிறார்.
இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளனர். சாதிக் (34) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜா மதுரை சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் இரவு வரை திரும்ப வரவில்லை. போன் செய்தபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் காருடன் மாயமான ஓட்டுநர் என எழும்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணை நடத்தினர். ஓட்டுநருக்கு போலீஸார் போன் செய்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக உஷாரான போலீஸார் கார் டிரைவர் யார் வீடு எங்கே, சேர்த்து விட்டது யார் என துருவி துருவி விசாரித்தனர்.
பின்னர் போன் கால் டவரை சோதித்தனர். என்ன ஆச்சர்யம் டவர் சென்னையிலேயே காண்பித்தது. சென்னையில் எங்கே இருக்கிறது என்று டவரை சோதித்தார்கள். அதுவும் எழும்பூரில் காட்டியுள்ளது. டவர் எழும்பூர் எல்லையிலேயே இருந்ததால், டிரைவர் எங்கேயும் ஓடவில்லை இங்கே தான் எங்கேயோ ஒளிந்துகொண்டு இருப்பார் என்று பேசிக்கொண்ட போலீஸார் எழும்பூரில் எந்த இடத்தில் காட்டுகிறது சோதித்துள்ளனர்.
சோதித்தபோது டவர் யுவன் சங்கர் ராஜா ஏரியாவே காட்டுகிறது என்று கூறியுள்ளனர். இதனால் குழப்பமான போலீஸார் காரை யாருக்கோ விற்றுவிட்டு இங்கேயே ஒளிந்திருக்கலாம் என்று யுவன் சங்கர் ராஜா அபார்ட்மெண்டுக்கு போயுள்ளனர். அங்கிருந்த யுவன் தரப்பினரிடம், ‘உங்கள் டிரைவர் காரை யாரிடமோ கொடுத்துவிட்டு இந்த ஏரியாவில் தான் எங்கோ ஒளிந்துகொண்டுள்ளார்’ என்று கூறிய போலீஸார், ‘காரை எங்கே நிறுத்துவீர்கள்’ என்று கேட்டுள்ளனர்.
‘இங்கே தான்’ என்று ஒரு இடத்தைக் காட்டியுள்ளனர். ‘இது தவிர வேறு எங்கெங்கு கார் நிறுத்தப்படும்’ என்று கேட்டபோது, ‘தரைத்தளத்தில் கீழே கார் பார்க்கிங் உள்ளது. அங்கு நிறுத்த மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு போலீஸார் போயுள்ளனர். அங்கு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் காணாமல் போன கார் அங்கு நின்றிருந்தது.
‘என்னங்க கார் காணாமல் போச்சுன்னு கம்பளைண்ட் செய்தீர்கள். கார் இங்கேயே நிற்கிறது?’ என்று கேட்டுள்ளனர். ‘அதுதான் சார் எங்களுக்கும் தெரியவில்லை. நாங்கள் இங்கே வந்து பார்க்கவே இல்லை’ என்று யுவன் தரப்பினர் அசடு வழிந்துள்ளனர்.
போலீஸார் பின்னர் போலீஸார் காரை சோதித்தபோது, காருக்க அந்தப் பக்கம் ஓட்டுநர் சாதிக் தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் சாதிக்கை எழுப்பியுள்ளனர்.
சுற்றி போலீஸும், அபார்ட்மெண்ட் உரிமையாளர், கார் உரிமையாளர் நிற்பதைப்பார்த்து மிரண்டு போன டிரைவர், ‘என்ன சார் ஏதாவது பிரச்சினையா?’ என்று கேட்டுள்ளார். ’நீதான்யா பிரச்சினை வா என்று அழைத்து இங்கே எப்படி வந்தாய் கார் எப்படி இங்கு வந்தது?’ என்று போலீஸார் கேட்டுள்ளனர்.
’சார், எனக்கு உடலில் சில பிரச்சினைகள் உள்ளன. தூங்கினால் அடித்துப் போட்டது போல் தூங்குவேன். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். இரவு படுத்தால் மதியம் 12 மணிக்குதான் எழுந்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.
’காரை ஏன் கீழ் தளத்தில் நிறுத்தினாய்?’ என்று கேட்டபோது, ’மேலே காரை விட இடமில்லை. அதனால் தரை தளத்தில் விட்டு தூங்கிவிட்டேன் சார்’ என்று டிரைவர் சாதிக் கூறியுள்ளார்.
’சரி, செல்போனை ஏன் சுவிட்ச் ஆஃப் செய்தாய்’ என்று போலீஸார் கேட்டதற்கு, ‘சுவிட்ச் ஆஃபா?’ என்று செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். ‘ஆமா சார் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியுள்ளது’ என்று அவரும் அசடு வழிந்துள்ளார்.
நல்ல டிரைவர், நல்ல ஓட்டுநர் இதில் கார் திருட்டுன்னு கம்ப்ளைண்ட் வேற? என்று தலையிலடித்துக்கொண்டு போலீஸார் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.