"காரில் கடத்தி நடிகை பாலியல்"மோகன்லால் மீது நம்பிக்கை இல்லை நடிகைகள் கருத்து..!!

Default Image

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். ஆனால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துவிட்டார்.
இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரேவதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் மோகன்லால் முடிவை எதிர்த்தனர். சில நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினார்கள். இந்த நிலையில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன் என்று திலீப் அறிவித்தார்.
ஆனாலும் திலீப்பை அதிகாரப்பூர்வமாக சங்கத்தில் இருந்து நீக்கவில்லை. நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்று விளக்கும்படி மோகன்லாலுக்கு நடிகைகள் கடிதம் அனுப்பினர். திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
ஆனாலும் நடிகர் சங்கம் மவுனமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நடிகைகள் அஞ்சலி மேனன், ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன், ரேவதி ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு கொச்சியில் கூடி மோகன்லால் மீது நம்பிக்கை போய்விட்டது. தீலிப்பை காப்பாற்றி சங்கத்தில் வைத்திருக்க முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.
அவர்களுக்கு பதில் அளித்து மோகன்லால் சார்பில் மலையாள நடிகர் சங்க செயலாளர் ஜெகதீஷ் கூறும்போது, “நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று சங்கத்தில் உள்ள பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்து உள்ளனர்” என்று தெரிவித்தார். இது நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்