காமராஜரின் வாழ்வு தன்னலமற்ற சமூகசேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு. : விவேக் நெகிழ்ச்சி…!
கருத்து கந்தசாமி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் காமெடி நடிகர் விவேக் தொடர்ந்து தனது கருத்தை காமெடி வழியாக மக்களுக்கு தெரிவிக்கிறார்.
இவர் பெரும்பாலும் மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
பெரும்பாலும் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.
கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளுக்கு நடிகர் விவேக் தனது பக்கத்தில்…
Gm dear students ! Try to read the life history of kamarajar. கர்ம வீரர் காமராஜரின் வாழ்வு தன்னலமற்ற சமூகசேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு.