காத்தாடி படத்தின் சினிமா விமர்சனம் !!

Default Image

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”.இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார், படத்தின் சினிமா விமர்சனம்.

அவிஷேக் கார்த்திக், டேனி இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர். சம்பத்துடன் சொகுசு காரில் வரும் சிறுமியை கடத்துகிறார்கள். சம்பத்துக்கு போன் செய்து 10 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். போலீஸ் சீருடையில் வரும் தன்ஷிகா அவர்களை பிடிக்கிறார்.

ஆனால் அவர் போலி போலீஸ் என்று தெரிகிறது. சம்பத்திடம் ரூ.50 லட்சம் வாங்கி மூவரும் பங்கு போட்டுக்கொள்ள திட்டமிடுகின்றனர். அப்போது சம்பத்தின் அடியாட்கள் சுற்றி வளைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்புகின்றனர். சிறுமி சம்பத் தனது அப்பா இல்லை என்றும், அவரிடம் அனுப்பி விடாதீர்கள் என்றும் சொல்லி அழுகிறாள். குழந்தையை வைத்து பெரிய கடத்தல் ஒன்றில் சம்பத் ஈடுபட்டு இருப்பது தெரிந்து அதிர்கிறார்கள். குழந்தையை காப்பாற்றினார்களா? என்பது மீதி கதை.

ஒரு சிக்னலில் போட்டாகிராபர் குழந்தையை படம் எடுப்பது போன்றும் அப்போது விபத்து ஏற்பட்டு ஒரு பெண் பலியாவது போன்றும் எதிர்பார்ப்புடன் கதை தொடங்குகிறது. அவிஷேக் கார்த்திக் திருடன் கதாபாத்திரத்தில் வருகிறார். சிறு சிறு திருட்டுகளில் அவர் ஈடுபடுவது சுவாராஸ்யம்.Image result for kaathadi

குழந்தையை கடத்திய பின் கதையில் வேகம். சிறுமியின் பிளாஷ்பேக் கதை கேட்டு அவளை காப்பாற்ற வில்லன்களிடம் போராடும்போதும், சாலையில் வீசப்பட்ட குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு கதறும்போதும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார். காதல் காட்சிகளிலும் கவர்கிறார்.

தன்ஷிகா வில்லன்களுடன் சண்டை போடுகிறார். குழந்தையின் பின்னணி அறிந்து கலங்குகிறார். டேனி சிரிக்க வைக்கிறார். சம்பத் வில்லனாக மிரட்டுகிறார். ஜான் விஜய், காளி வெங்கட் கதாபாத்திரங்களும் நேர்த்தி. திரைக்கதையில் இன்னும் வேகம் கூட்டி இருக்கலாம். சிரிக்க வைக்கும் நோக்கில், காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் கல்யாண் குமார். ஜான் ஜோம் ஒளிப்பதிவும், பவன் தீபன் இசையும் கதையோடு பயணித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்