காஜல் அகர்வாலின் வயதை கண்டு நெகிழ்ந்த ரசிகர்கூட்டம்..!
தென் இந்தியாவின் முன்னணி ஹீரோக்களுடன் எல்லாம் ஜோடி சேர்ந்துவிட்டு இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரிடம் உங்களுடைய கனவு வேடம் என்ன? என்று கேட்டதற்கு ’அப்படி எல்லாம் எதுவும் ஃபிக்ஸ் பண்ணவில்லை. காஜலிடம் கொடுத்தால் எந்த வேடமாக இருந்தாலும் நன்றாக நடிப்பேன் என்று பெயர் எடுக்க வேண்டும். ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போதே முதலில் கதை, அடுத்து எனது கதாபாத்திரம் இரண்டையும் தான் பார்ப்பேன்.
அதன் பிறகு தான் மற்றவைகளை பேசுவேன்’. உங்களுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின்? ’ரஜினிகாந்த், ஸ்ரீதேவி. இரண்டு பேரையும் மிகவும் பிடிக்கும். இப்போது நிறைய புதுமுகங்கள் வருகிறார்கள். நித்யாமேனனையும் பிடிக்கும்’.
சினிமாவில் யார் உங்களுக்கு நெருக்கம்? எல்லோரிடமும் பழகுவேன். ஆனால் நெருங்கிய நட்பு யாருமே சினிமாவில் இல்லை. எல்லாமே மும்பை தோழிகள் தான்’. என்று பதில் அளித்தார்.