கர்நாடகாவில் சாதனை படைத்த தல அஜித்தின் 'விவேகம்'!!!
தல அஜித் படம் ரிலீஸாகிறது என்றால் அன்றைய தினம் ஒரு தீபாவளி போல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் படத்திற்கு ஓபனிங்க் சூப்பராக இருக்கும்.
அதே போல அஜித்தின் படத்தை கன்னடத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக வெளியான ஆரம்பம், என்னை அறிந்தால் படம் கன்னடத்திலும் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விவேகம் படம் தமிழில் போதிய வரவேற்பை பெற தவறியது. இருந்தும் இப்படம் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அடுத்து தெலுங்கு சினிமாவில் பிரமாண்டமாக உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படம் கன்னடத்திலும் தயாராகி நேரடியாக வெளியிட உள்ளனர்.
DINASUVADU