கர்நாடகாவில் களைகட்டும் விசுவாசம்….!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம் பல சாதனைகளையும், பல கோடிகளையும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் 32வது நாளை தாண்டி விஸ்வாசம்! இப்படம் அங்கு 10 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. மேலும் இப்படத்தின் கன்னட டப்பிங் ‘ ஜகமல்லா’ விரைவில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.