கருணாநிதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த நடிகர் விவேக் – புதிய தகவல்
நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் இவர். அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமான கிரீன் கலாம் எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் விவேக்.கிரீன் கலாம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா ஆகியவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் விவேக்.