கருணாநிதி மரணம் ..!சர்கார் பாதியிலே நிறுத்தம் …!

Default Image

கருணாநிதி காலமானதால் சர்கார்  படக்குழு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது.
 சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால்  இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் படத்தின் பெருபாலான காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவில் முடித்த கையோடு இப்படத்திற்கான சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் சென்றனர்.
தற்போது திமுக தலைவர் கருணாநிதி  அவர்கள் காலமானதால் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்