கமலின் அடுத்த அதிரடி..! இந்தியன்-2 வில் அறம் பட நாயகி..!!
கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.
நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி நடித்து விட்டார்.கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள்.
அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்கள் இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள அறிவிப்பு வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்