கன்னட மக்கள் பொதுவாக அன்பானவர்கள்…!அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும்…!விவேக்
கன்னட மக்கள் பொதுவாக அன்பானவர்கள். அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும். இது பல நாள் அரசியல். கடினம் கடப்போம்; மனிதம் படைப்போம் என்று விவேக் ட்வீட் செய்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டை ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.
இன்று மோடியின் சென்னை வருகையைக் கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”அமைதிப் பூங்காவில் கொஞ்சம் புயல்! நீதிக்காக வீதி வந்திருக்கிறோம். விரைவில் பூங்காற்று திரும்பும். பொதுவாக கன்னட மக்கள் அன்பானவர்கள். அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும். இது பல நாள் அரசியல். கடினம் கடப்போம்; மனிதம் படைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.