‘கன்னடர் ‘பட்டியலில் ரஜினியை சேர்த்த கமல் …!அதிர்ச்சித் தகவலை ட்விட்டரில் கசிய விட்ட கமல்ஹாசன்…!

Default Image

கன்னடர் பட்டியலில் ரஜினி பெயரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சேர்த்துள்ளார்.

 

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ராஜ்குமார், சரோஜா தேவி, அம்பரீஷ் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டதோடு விடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் பெயரையும் கன்னடத்துக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டதாக கூறியதுமே, அவர் கன்னடர் என விமர்சனங்கள் வந்தன. ரஜினிகாந்த் தரப்போ, ரஜினியின் மூதாதையர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்ததாக கூறி வருகிறது. ஆனால், கமல்ஹாசனோ, ரஜினிகாந்த்தை கன்னடர் என குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் ரீதியாக ரஜினிகாந்த்துக்கு எதிராக கமல் எடுத்து வைத்துள்ள வாதமாக பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் கோவத்துக்கு  ஆகியுள்ளனர்.

இதற்கு முன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்  கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்