‘கண்ணாடி’ பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக்….!!!வெளியிட்ட விஜய்சேதுபதி…!!
நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில்இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .
திருடன் போலீஸ் மற்றும் உள்குத்து போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. தனது மூன்றாவது படமாக நடிகர் சந்தீப் கிஷன் வைத்து உருவாக்கிய படம் கண்ணாடி படம் தமிழ் ,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (நவம்பர் 23) நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.போஸ்டருக்கு ட்விட்டர் பக்கத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தெலுங்கில் உருவாகும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் நடிகர் சந்தீப் கிஷன். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘Ninu Veedani Needanu Nene’ என பெயரிட்டுள்ளனர் படக்குழு.படத்திற்கு இசை எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார், படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
All the best to #Kannaadi team ????#KannaadiFirstLook@sundeepkishan @anyasinghoff @caarthickraju @subbhunaarayan @vstudiosoffl @sri_bhava @MusicThaman @Cinemainmygenes @Pk_dop @actorkaruna @Kirubakaran_AKR@johnsoncinepro pic.twitter.com/TeGecnA3Cp
— VijaySethupathi (@VijaySethuOffl) November 23, 2018
DINASUVADU