கண்டிப்பாக 'துப்பாக்கி 2' வரும் – இயக்குனர் முருகதாஸ் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!!!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் முதன் முதலாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தை கலைபுலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சந்தோஸ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் விஜயை படு ஸ்டைலான ராணுவ வீரராக நடித்திருப்பார். படத்தின் திரைக்கதையும் வேகமாக ஆக்சன் கலந்து எடுக்கபட்டிருக்கும். ஆதலால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. வசூலிலும் வாரி குவித்தது.
இதனை தொடர்ந்து கத்தி, சர்க்கார் எனும் இரண்டு படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. இருந்தாலும் துப்பாக்கி 2 பாகத்தை தான் ரசிகர்கள் பெரிதும் எதிபார்த்து காதிருகின்றனர். இதற்க்கு இன்று பிகைன்ட்வுட்ஸ் விருது விழாவில் பதிலளித்த முருகதாஸ், கண்டிப்பாக துப்பாக்கி 2 ஆம் பாகம் வரும். என குறிப்பிட்டார். இதனை கேட்டதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU
,