கணவனுடன் சுற்றிதிரியும் நடிகை சமந்தா..!!
நடிகை சமந்தா, அவரது கணவர் நாக சைதன்யா நடித்த படங்கள் கடந்த மாதம் ஒரே நேரத்தில் வெளியாகின. பின்னர் இருவரும் தங்களது குடும்பத்தினர் நாகார்ஜூனா, அமலா, நடிகர் அகில் (சமந்தா மைத்துனர்) உள்ளிட்டோருடன் விடுமுறை பயணமாக குரோஷியா நாட்டுக்கு சென்றனர். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கியவர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை ரசித்தனர். குடும்பமாக படகில் ஏறி அமர்ந்து சவாரி செய்தனர். அப்போது சமந்தா குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை எடுத்ததுடன் தனது தனிப் படங்களையும் படம்பிடித்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் சமந்தா நடித்து திரைக்கு வந்த யு டர்ன் படம் நல்ல விமர்சனங்களையும் இதையடுத்து வசூலும் ஈட்டத் தொடங்கியது. ஆனாலும் பிறகு வசூல் குறைந்ததால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஓரளவுக்கு நஷ்டத்தையே தந்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைக் கேட்டு சமந்தா அப்செட் ஆனார். இதையடுத்து விடுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு அவர் திரும்பி வந்தார்.
DINASUVADU