கடையில் கலாட்டா செய்த சமந்தா : அப்படி என்ன தான் செய்தாங்க….!!!
திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இருக்காது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அதை உடைத்து திருமணத்திற்கு பிறகும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா.
அப்படி சமீபக்காலமாக அவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்து செம ஹிட். அடுத்து கூட அவர் நடித்துள்ள U turn என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை சமந்தா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். அவரை பார்க்கவே கடை பக்கம் நிறைய பேர் வர காய்கறிகளும் சற்று நேரத்தில் விற்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் லட்சுமி மஞ்சு நடத்தி வரும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூலி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அளிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்காக தான் சமந்தா இப்படி காய்கறி மார்க்கெட்டில் விற்றுள்ளார்.