கடைதிறப்பு விழாவிற்கு வந்த பிரபல நடிகை..! சொன்னது என்ன ?
சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.
சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் படங்களில் தனது நடிப்பை தொடங்கினர்.
இவர் நேற்று ரிலையன்ஸ் நிறுவனம் தனது 25வது கடையை திறக்க நடிகை சுருதிஹாசன் ஐ அழைத்திருந்தனர்.கடை திறப்பு விழாவில் நடிகை சுருதிஹாசன் பாடலும் பாடினார். மேலும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்.
Celebrating 25 Reliance Digital stores in Chennai with @shrutihaasan! #25thRDStoreInChennai pic.twitter.com/jtRAUi1saQ
— Reliance Digital (@RelianceDigital) July 7, 2018