கஜா புயலிலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தியேட்டரில் வேலை செய்து சம்பாதித்த விஷால்!
கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்னும் தங்கள் இயல்பு வாழ்கை திரும்ப கிடைக்கவில்லை. இன்னும் பலர் உதவிக்காக காத்திருக்கின்றனர். பலர் அவர்களுக்காக உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் தான் சன் டிவியில் தொகுத்து வழங்கும் ஓர் நிகழ்ச்சியில் கஷ்டப்படும் ஒருவருக்கு பிரபல திரைப்பிரபலங்கள் உதவுவார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
source : cinebar.in