ஓஒ இவங்க தான் பிக்பாஸ் பைனலுக்கு நேரடியாக போறவரா…..!!!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் 10 பேர் இதுவரை வெளியேறியுள்ளனர். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலக்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கடந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் இறுதியாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவ் வீட்டிலிருக்கும் போட்டியாளருக்கு டாஸ்க் கொடுக்கும் வீடியோ ஒன்றை நிகழ்ச்சி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் வெற்றி பெரும் நபருக்கு பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை வழங்க இருப்பதாகவும் ஆரவ் தெரிவித்துள்ளார்.இந்த டாஸ்கில் எலிமினேஷன் பட்டியலில் இடம்பெறுபவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே எலிமினேஷனுக்காக மக்கள் வாக்களிக்க தொடங்கிவிட்ட நிலையில் இந்த டாஸ்கில் வெற்றி பெரும் நபர் வெளியேற்றப்படுவாராம் என்ற கேள்வியும் எழுகிறது.