ஒரே பாடலில் ஒட்டுமொத்த திரை பிரபலங்களை திரும்பி பார்க்க வைத்த தமிழ்படம் 2 பாடல்..!

Default Image

சி.எஸ்.மோகன் இயக்கத்தில் சிவா நாயகனாகவும் , ஐஸ்வர்யா நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘தமிழ்படம் 2’. இதில் பல முன்னணி நடிகர்களின் படங்களை கோர்த்து எடுத்தாற்போல் ட்ரைலர் வெளியாகியது .இதனால் இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

ரசிகர்களை கவர இப்படக்குழுவினர் புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் அறிவித்திருக்கிறார். அதன்படி ‘நான் யாருமில்ல…’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

சிவாவின் அறிமுகப்பாடலாக கூறப்படும் இதில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட பலரை கலாய்க்கும் படி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்