ஒரே படம்! நான்கு மொழி!! நான்கு ஹீரோயின்கள்!! நாளை டீசர் ரிலீஸ்!!!
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி ஜானரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது.
இதன் தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இந்த தமிழ் பாதிப்பிற்கு பாரிஸ் பாரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல தெலுங்கில் ‘தட் இஸ் மஹாலக்ஷ்மி’ என பெயரிடப்பட்டுள்ளது.இந்த தெலுங்கு பதிப்பில் தமன்னா நடித்து வருகிறார்.
மலையாளத்தில் குயின் ரீமேக்கில் மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார், இந்த படத்திற்கு ஜம் ஜம் என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல கன்னட ரீமேக்கில் பாருள் யாதவ் என்பவர் நடிக்கிறார். இந்த படத்திற்கு பட்டர்ஃபிளை என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு படங்களின் டீசரும் நாளை ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU