ஒரே நேரத்தில் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய 2 நாயகிகள்!
சஞ்சீவ்-ஆல்யா மானசா நடிப்பில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியல் அந்த தொலைக்காட்சிக்கு அதிக டிஆர்பி கொடுத்தது என்று கூட கூறலாம். இந்த நேரத்தில் சீரியலில் இரண்டு இளம் நாயகிகள் விலகியுள்ளனர்.
இதுகுறித்து வைஷாலி கூறுவது என்னவென்றால், அவருக்கு ஏதோ உடல்நலத்தில் பிரச்சனை உள்ளதாம். இதனால் மருத்துவர்கள் அவரை 3 மாதங்கள் ஓய்வு எடுக்க கூறியிருக்கிறார்களாம். அதனால் தான் சீரியலில் இருந்து விலகியுள்ளாராம்.
பவித்ரா கூறுகையில், ராஜா ராணி எனக்கு பெரிய பெயர் கொடுத்தது. ஆனால் இதே தொலைக்காட்சியில் வேறொரு சீரியலில் உடனடியாக நடிக்க வேண்டிய சூழல். அதனால் ராஜா ராணி சீரியலில் இருந்து விலக வேண்டியதாகிவிட்டது.
சீக்கிரமே புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் என்னை பார்க்கலாம் என்று சந்தோஷமாக கூறியுள்ளார்.