ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண முத்தக்காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு. காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் தான் இன்றைய படங்களில் அதிகமாக காட்டப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விழாவினை நடத்த தமிழக அரசு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது அரசு சார்பில் நிதி உதவி செய்தாக வேண்டும். அப்படியில்லை எனில், நிகழ்ச்சியை நடத்துவதே தடைபட்டு விடும் என்று திரையுலகினரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இதனை முன்வைத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…