ஒரு பாடலுக்கே இத்தனை லட்சமா?! தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!
தன் ஒல்லி பெல்லி இடுப்பழகால் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர் இலியானா. இவர் தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகையாக இருந்தவர். தமிழில் விஜயுடன் நண்பன் படத்திலும் நடித்திருந்தார். பிறகு தன் காதலனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
அண்மையில் இவர் கர்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. பிறகு இந்த செய்தியை அவர் மறுத்து விட்டார். இந்நிலையில் இவரது கவர்ச்சியான சில புகைபடங்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்ளனர். அதனை பார்த்து தயாரிப்பாளர்கள் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட கேட்கையில், அதற்கே 40 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் அதற்கு நாங்கள் முன்னனி நடிகைகளையே புக் செய்து விடுவோம் எனக்கூறி ஓடி விட்டனராம்.
source : cinebar.in