ஒரு பக்கம் பொண்டாட்டிக்கு டெலிவரி.. மறுபக்கம் பவி டீச்சருடன் திருமணம்! இயக்குனரின் வைரல் போட்டோ…

VigneshKarthick Brigada Married

பிரிகிடா சாகா : பிரபல தொலைக்காட்சி தொடரான ​​”பகல் நிலவு” இல் தனது பாத்திரத்திற்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக், தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோலிவுட் ஹீரோயின் பிரிகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்த புகைப்படத்தை அவர்கள் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திடீரென டைரக்டருக்கும், ஹீரோயினுக்கும் நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டதாக என அனைவருமே ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், இதெல்லாம் ஒரு படத்துக்கான போட்டோ ஷூட்டாக இருக்கலாம் என சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.


அதிலும் அவரது நண்பர்கள் பொண்டாட்டிய டெலிவரிக்கு அனுப்பிட்டு.. இப்படி திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டா நாங்கள் என்ன ஆவது என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

தமிழில் அடியே, திட்டம் இரண்டு மற்றும் ஹாட் ஸ்பாட் படங்களின் மூலம் தனி அங்கீகாரம் பெற்றார் விக்னேஷ் கார்த்திக். அதெ போல், பிரிகிடா சாகாவுக்கென பெரிய நல்ல ரசிகர்கள் பட்டாளமே உள்ளனது, தமிழில் பல குறும்படங்கள் மற்றும் படங்களில் நடித்து நல்ல அங்கீகாரம் பெற்றார். மறுபுறம், இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்