டிவி தொகுப்பாளினியாக இருந்து, பிறகு கூட்டத்தில் ஒரு நடிகையாகி பிறகு கதாநாயகி அந்தஸ்து பெற்று, தற்போது கதைகளின் நாயகியாக மாறி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் கதாபாத்திர தேர்வுகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கிறது. இவர் தற்போது வடசென்னை படத்திற்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் கனா.
இப்படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகன் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரித்துள்ளார். இதன் இயக்குனர் சிவாவின் நண்பரான அருண்ராஜா காமாரஜ். இவருடன் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த காரணங்கள் போதும் ஒரு சாமானிய சினிமா ரசிகனை எதிர்பார்க்க வைக்க.
இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடபட்டது. தனது அப்பாவின் கண்ணீரை துடைக்க கிரிக்கெட்டை ஆண்களுக்கு நிகராக கையில் எடுக்கும் ஓர் பெண். அதனால் அவர் மீது விழும் சமூக பார்வை. காதல், சோகம், விடாமுயற்ச்சி என ட்ரெய்லர் விரிகிறது. இடையே சிவகார்த்திகேயனின் கெஸ்ட் ரோல். கொஞ்சம் சுசீந்திரனின் ஜீவா பட சாயல் தெரிந்தாலும் படத்தின் ட்ரெய்லர் நன்றாக தான் இருக்கிறது. படம் ரிலீஸானால் தான் ரசிகனின் எதிர்பார்ப்பை இதே அளவு பூர்த்தி செய்கிறதா என பார்ப்போம் .
படத்தின் ட்ரெய்லரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ரிலீஸ் செய்திருப்பது, தயாரிப்பாளர் சிவாவின் நல்ல யோசனை.
source : cinebar.in
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…