"எப்படி படம் என்றாலும் நடிக்கிறேன்" கவர்ச்சியில் இறங்கிய நடிகை..!!

Default Image

கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். குடும்பபாங்கான, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வந்த அனுபாமாவுக்கு தொடக்கத்தில் ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தாலும் சக ஹீரோயின்களின் கவர்ச்சி போட்டியில் அவர் காணாமல்போய்விட்டார். இதற்கிடையில் அனுபாமா, இணைய தள பக்கத்தில் சேலை, தாவணி, சுடிதார் அணிந்த புகைப்படங்களும் விதவிதமான கோணத்தில் சிரிக்கும் புகைப்படங்களும் ஏகத்துக்கு வெளியிட்டு கவனத்தை கவர முயன்றார். அது எடுபடவில்லை. ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்கள் சோர்வடைந்தனர். பட வாய்ப்புகளும் டல்லடிக்கத் தொடங்கியது. கமர்ஷியல் ஹீரோயினாக மாறினால்தான் மவுசு கூடும், அதற்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று உடனிருக்கும் தோழிகளும், நலவிரும்பிகளும் அவருக்கு அட்வைஸ் கூறினர்.
அனுபாமா உதட்டு முத்தம் ரசிகர்கள் குறும்புஇதையடுத்து, ‘கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்று கூறிவந்த அனுபாமா அந்த பாலிசியை உடைத்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க முடிவுசெய்தார். தற்போது தனது புகைப்படங்களை கவர்ச்சி பாணிக்கு மாற்றியிருக்கிறார். சட்டையை தோள் பகுதியில் கழற்றி காம பார்வையுடன் ஒரு புகைப்படம், கண்ணாடி முன்நின்று தனது உதடு மீது அவரே முத்தம் தரும் புகைப்படம் உள்பட 3 படங்களை வெளியிட்டிருக்கிறார். அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறும்பு ரசிகர்கள் சிலர் கண்ணாடியில் தெரியும் அனுபாமாவின் முகத்தை அழித்து அந்த இடத்தில் தங்களது படத்தை வைத்திருக்கின்றனர். தவிர அனுபாமாவுக்கு பாராட்டுகளும் குவிந்துள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்