என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன் ஓபண் டாக்!

Default Image
பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும் கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம் போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்க இசைக் கல்லூரியில் சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர். கமல்ஹாசனின் மூத்தமகள். அழகும், அறிவும் நிறைந்த இவர், தான் கடந்து வந்த பாதையை விளக்குகிறார்!Image result for shruti hassan open talk
கமல்ஹாசனை நடிகராகவும், அப்பாவாகவும் நான் காண்கிறேன். அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி நுழையமாட்டார். அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை. யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் கதை கேள் என்றும் சொன்னதில்லை. எங்கள் திறமைகளை அங்கீகரிக்கும் சிறந்த தந்தை அவர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இசைஅமைப்பாளராக முதல் அடி எடுத்துவைத்தபோது, உருவாக்கிய முதல் பாடலைப் பாடும் தைரியத்தை அவர்தான் தந்தார். அவர் சுவாசிப்பதுகூட சினிமாவைத்தான் என்று சொல்லலாம். இந்த வயதிலும் அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போகிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னை சிலிர்க்கவைக்கிறது.Image result for shruti hassan open talk about kamal
எங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரத்தையும் அப்பா எங்களுக்கு தந்திருக்கிறார். அதனால் அவர் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் அது எங்களுக்கும் சம்மதம்தான். வாழ்க்கையில் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நல்லதற்காகத்தான் இருக்கும். அவர் அரசியலில் இறங்கியதையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவரது உண்மை, நீதி, அர்ப்பணிப்பு போன்றவை எல்லாம் இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக மட்டும் இருந்தது. இனி அது தமிழக மக்களுக்கும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.
Related image
அப்பா என்னை சிந்தனைவாதி என்று சொல்வார். நான் அவரது மகளாக இல்லாமலிருந்தாலும் என்னை பற்றி அவர் அப்படித்தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு அவர் மற்றவர்களை அங்கீகரிப்பவர். எனது எழுத்து, இசை, நடிப்பு எல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அப்பாவைதான் அழைப்பேன். எப்போதும் உண்மையின் பக்கமிருந்து சரியான தீர்வு சொல்வார். அவர் எங்களை முழுமையாக நம்புகிறார். அந்த நம்பிக்கை காலம் முழுக்க தொடரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்