"என் உயிருக்கு ஆபத்து" பிரபல நடிகை பகிர் புகார்..!!

Published by
Dinasuvadu desk
இந்தியாவில் அநீதிக்கும், அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு இதுதான் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மற்றும் திரை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இருவரும் தனுஸ்ரீ தத்தாவின் புகாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துஹ்ள்ளார்.
நடிகை தனுஸ்ரீ  தத்தா கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அண்மையில் பரபரப்புப் புகார் கூறினார். பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் 2005-ல் ‘சாக்லேட்’ படப்பிடிப்பின்போது திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரியும் தன்னிடம் தவறான வகையில் நடந்துகொள்ள முயன்றதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் நானா படேகர் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி ஆகிய இருவரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (வியாழக்கிழமை) நானா படேகர் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி இருவரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் அநீதிக்கும், துன்புறுத்தலுக்கும், அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு இதுதான். படேகர் மற்றும் விவேக் குழுக்கள் சமூக வலைதளங்களிலும் மற்ற பொதுவெளிகளிலும் என்னைப் பற்றிய பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி எனக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுக்கிறது.என்னுடைய வீட்டுக்குள் அந்நியர்கள் நுழைய முயற்சிக்கிறார்கள். வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாப்பிடச் சென்றனர். அப்போது யாரென்றே தெரியாத இரண்டு பேர் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். சரியான நேரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். என் உயிருக்கே இங்கு உத்தரவாதம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Recent Posts

‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…

12 minutes ago

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…

19 minutes ago

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

42 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

1 hour ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

2 hours ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago