இயக்குனர் சுசி கணேஷன் என்னிடம் தவறாக நடந்தார் , என்னுடைய உடம்பை உரசினார் என நடிகை அமலாபால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது தமிழக சினிமைவை உலுக்கி உள்ளது.
இயக்குனர் சுசி கணேஷன் விரும்புகிறேன், திருட்டுப்பயலே ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் திருட்டுப்பயலே-2 கூட வெளியானது.
இந்நிலையில் லீலா மணிமேகலை என்பவர் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். காரில் தன்னை ஏற்றி படுக்கைக்கு அழைத்ததாக கூறினார்.இது தமிழக திரைத்துறையில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.இதற்கு சுசி கணேஷன் பதில் கொடுக்கையில், ‘எனக்கு நம்பிக்கை உள்ளது, நான் எந்த தவறையும் செய்யவில்லை.நான் தைரியமாக நீதிமன்றத்திற்கு செல்கிறேன், மேலும், இது உண்மை என்று நிரூபணம் ஆனால், நான் இங்கேயே தூக்கில் தொங்குவேன்’ என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை அமலாபால் , திருட்டு பயலே 2ஆம் பக்கத்தில் நான் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுசி கணேஷன் என்னிடம் தவறாக இரட்டை தொனியில் பேசினார் , தவறாக என்னுடைய உடம்பை தொட்டார் , என்னை ஒட்டி உரசினார் என்று நடிகை அமலாபால் கூறியது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தொடர்ந்து பேசிய நடிகை அமலாபால் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் மீது பாலியல் சீண்டல் நடைபெறுகிறது. இயக்குனர் சுசி கணேஷன்னால் லினா மணிமேகலை எப்படி பாதிக்கபட்டுள்ளார் என்பதை என்னால் உணரமுடிகிறது.லினா மணிமேகலை குற்றசாட்டை நான் ஆதரிக்கிறேன்.திருட்டு பயல் படத்தில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வு பல்வேறு மன சங்கடத்தை உண்டாக்கியது.இயக்குனர் சுசி கணேஷன்னால் ஏற்பட்ட கொடுமையை சொல்லிய லினா மணிமேகலைக்கு பாராட்டுக்கள் என்று நடிகை அமலாபால் கூறினார்.தற்போது நடிகை அமலாபால் வைத்த இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமாவை மேலும் உலுக்கி உள்ளது.
DINASUVADU
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…