என்ன கொடும சார் இது ..!சர்காரையும் விட்டுவைக்காத ‘தமிழ்ப் படம் 2.0’!
நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. இப்படம் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களையும் அவர்களது படங்களையும் கலாய்க்கும் விதமாக எடுக்கப்படும் Spoof திரைப்படங்கள் பாணியில் தமிழில் முதன்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கலாய்த்து எடுக்கப்பட்டது.
இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவிற்கு புதிது என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017ம் ஆண்டின் இறுதியில் தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகம் ‘தமிழ்ப் படம் 2.0’ பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வெளியான தமிழ்ப் படம் 2.0 படத்தின் போஸ்டர்களில் அரசியல்வாதிகளையும் விட்டுவைக்காமல் கலாய்த்திருந்தனர். அவை சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகின.கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.இதுவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இதில் 20 படங்களுக்கு மேல் கலாய்த்தது தமிழ் படம் .அதில் ரஜினிகாந்த் நடித்த காலாவை கலாய்க்கும் விதமாகவும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிக்கலில் சிக்கியுள்ள சர்கார் படத்தையும் விட்டுவைக்காமல் தமிழ்படம் 2 கலாய்த்து உள்ளது.இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.