விவாகரத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ’நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் நம்மை பற்றி கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான். பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என கூறுவார்கள். மற்றொன்று நாம் சரியான பாதையில் செல்கிறோம் என சொல்வார்கள். இப்போது நல்ல பாதையில் போவதாக தான் கிசுகிசுக்கள் வருகின்றன.
அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அதே நேரத்தில் நாம் செய்வது தவறு என கூறும் போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் தவறை நான் திருத்திக்கொள்வேன். சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே எடுத்துக்கொள்வேன்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…