வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன.
ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம், மாலை நான்கு மணிக்கு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படமும் ,
15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.
விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சன் டிவி: 14-ம் தேதி காலை 11 மணிக்கு நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ திரைப்படமும், 15-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
கலைஞர் டிவி: 14-ம் தேதி காலை 10.30-க்கு அதர்வா நடித்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம் வெளியாகிறது. 15-ம் தேதி காலை 10.30-க்கு அஸ்வின், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘திரி’ படம்.
பொங்கல் வைத்த கையோடு, சேனல்களை மாற்றி திரைப்படங்களைக் காண்பதற்கு மட்டுமே மக்களுக்கு நேரம் இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் இனி பொங்கல் என்பது தொலைக்காட்சியை காணும் பொங்கலாகிவிடும் போல் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைதிருங்கள் ….
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…